பண்டிகைக் காலத்தின் போது, அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பருப்பு, கோதுமை, சீனி, ரின்மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மக்களின் வருமானத்தை விட உணவுக்காக செலவிடப்படும் தொகை அதிகரிதுள்ளமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதனால், எதிர்காலத்தில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து, பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ மேலும் கூறினார்.