2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் , பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் ஊடாக இன்று (19) அறிவிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இது குறித்து தெரிவிக்கையில், தகவல்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் தாம் தெரிவு செய்த கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசித்து ,அதற்கான பதிவுகளை மாணவர்கள் பூரணப்படுத்த முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கூறினார்.
பதிவு நடவடிக்கைகள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் காணப்படும் வெற்றிடங்களுக்காக அதாவது பல்கலைக்கழக அனுமதிக்காக மேல் முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும். அதன்போது அனுமதி குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் அடிப்படையில் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
பதிவு நடவடிக்கைகளை முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழக செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் அடுத்த வருட ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.