மதுரை: பள்ளி ஆசிரியர் தாக்கியதால் கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு கோரி தந்தை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மாணவனின் இடது கண்ணை பரிசோதித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிட்டார். நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
