போபால், ”சர்ச்சைக்குரிய பதான் படத்தை, நடிகர் ஷாருக் கான், தன் மகளுடன் சென்று பார்க்க வேண்டும்,” என மத்திய பிரதேச மாநில சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் ஷாருக், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ள பதான் என்ற ஹிந்தி திரைப்படத்தில் இடம் பெறும், ‘பேஷாரம் ரங்’ என்ற பாடல், சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது.
அதில், படத்தின் நாயகி தீபிகா படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், அவர் காவி நிறத்தில் அரைகுறை உடை அணிந்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த படத்துக்கு எதிராகவும், ஷாருக் கானை கண்டித்தும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில், சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் நேற்று கூறியதாவது:
பதான் திரைப்படத்தை ஷாருக் கான் தன் மகளுடன் சென்று பார்க்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில், மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இதே போன்ற படத்தை தயாரித்து இயக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement