மெஸ்ஸியை வென்ற கைலியன் எம்பாப்பே: உலக கோப்பை தங்க காலணி விருது தட்டிச் சென்று அசத்தல்



கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்து சாதனை படைத்த பிரான்ஸ் அணி கைலியன் எம்பாப்பே, தொடரின் சிறந்த வீரருக்கான தங்க காலணி விருதை தட்டிச் சென்றுள்ளார்.


மெஸ்ஸி-எம்பாப்பே இடையே போட்டி

உலக கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர்களுக்கு தங்க காலணி விருது வழங்கப்படும் நிலையில், தொடரில் தலா 5 கோல்களை அடித்து பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே-வும், அர்ஜெண்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி-யும் இதற்கான போட்டியில் இருந்தனர்.

பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிக்கு இடையிலான உலக கோப்பை இறுதிப் போட்டியில், முதலில் இரண்டு கோல்களை அடித்து அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி 7 கோல்களுடன் முன்னிலை பெற, இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் எடுத்த கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்து முன்னேறினார்.

உலக கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி அர்ஜெண்டினா அணியிடம் கோப்பை தவறவிட்டு இருந்தாலும், தங்க காலணிக்கான போட்டியில், அர்ஜெண்டினாவின் ஜாம்பவான் வீரர் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தங்க காலணி விருதை தட்டிச் சென்றுள்ளார்.


எம்பாப்பே-வின் கோல்கள்

உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது கைலியன் எம்பாப்பே தனது முதல் கோல் கணக்கை தொடங்கினார்.

அதன் பிறகு டென்மார்க் எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தார், சூப்பர் 16 சுற்றில் போலந்து அணிக்கு எதிராக மீண்டும் இரண்டு கோல்களை கைலியன் எம்பாப்பே எடுத்தார்.

இதையடுத்து நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான காலிறுதி போட்டியிலும், மொராக்கோ அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் எம்பாப்பே கோல் அடிக்க வில்லை.

ஆனால் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தன்னுடைய 6வது, 7வது மற்றும் 8வது என்ற ஹாட்ரிக் கோல்களை அடித்து பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே உலக கோப்பை கால்பந்து தொடரின் தங்க காலணி விருதை தட்டிச் சென்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.