புதுடெல்லி: டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடுங்குளிர் காற்று வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, டெல்லி, வடக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுங்குளிர் காற்று வீசுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து முதல் ஒன்பது டிகிரி வரை பதிவாகி உள்ளது.
சாலை முழுவதும் மூடுபனியாக காணப்படுகிறது. அடர்த்தியான மூடுபனி காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றன. பெரும்பாலான வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மக்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. மாறாக காலை 9 மணிக்கு மேல்தான் மக்கள் நடமாட்டம் உள்ளது. வடமாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.