“அன்று எம்.ஜி.ஆர்-ஐ கேட்டார்கள்… இன்று என்னை கேட்கிறார்கள்”- அண்ணாமலை பேச்சு

“திமுக என்னிடம் வாட்சுக்கு பில் கேட்கிறது. எனது சொத்துப் பட்டியலை வெளியிடும் அதே நாளில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவேன்” என அண்ணாமலை திருப்பூரில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வில்  பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தாராபுரம் ரோட்டில் கோவில் வழி அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு 60வது வார்டில் உள்ள அரசு பள்ளிகளின் மேம்பாடு பணிக்காக 2,40,000 தொகை மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கினார். மேலும் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலை முன்பு இணைந்து கொண்டனர். டாஸ்மாக் குடிநோயால் கணவனை இழந்து வாடும் 45 இளம் தாய்மார்களின் குழந்தைகளின் கல்வி உதவி தொகையாக 3,000 ரூபாய் வீதம் 45 பேருக்கு வழங்கினார்.

image
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பேச்சு அநாகரிகமாக மாறி வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவின் கேள்விக்கு, பாஜகவினர் பொறுப்பான பதில் அளிப்பார்கள். ராகுல் காந்தி மேற்கொண்டது நடை பயணம் அல்ல; வாக்கிங். ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைத்த வெற்றியை குஜராத் தேர்தலில் பார்த்திருக்கிறோம்; அனைத்து தொகுதிகளும் தோல்வி. ஆனால் பாஜக மேற்கொள்ளும் நடைபயணம் என்பது ஒரு வருட காலம் மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்களின் பிரச்சனைகளை புரிந்து ஒரு வருட காலம் அவர்களோடு ஒன்றி இருப்போம்” என்றார்.

திருப்பூர் வடக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு @CPRBJP, மாநில பொதுச் செயலாளர் திரு @apmbjp, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு @senthilvelBJP, மாநிலச் செயலாளர் திருமதி மலர்கொடி ஆகியோரின்… (1/3) pic.twitter.com/dGD3ldU7LP
— K.Annamalai (@annamalai_k) December 20, 2022

மேலும் பேசுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எனது வாட்ச் பில் மட்டுமல்ல… எனது முழு வரவு செலவு கணக்கையும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்கிறேன். அடுத்த மாதத்தில் ஒரு இணையதளம் தொடங்கி திமுக எம்எல்ஏ துவங்கி அமைச்சர் வரையிலான ஊழல் பட்டியலில் வெளியிட இருக்கிறோம். இலவச தொடர்பு எண்ணை அறிமுகம் செய்து அந்தந்த பகுதியில் திமுக பினாமிகள் சேர்த்து வைத்த சொத்து பட்டியலையும் பொதுமக்களே தெரிவிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

image
சாமானிய மக்களை பார்த்து, ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் எம்ஜிஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள்; இன்று என்னை கேட்கிறார்கள். முதலமைச்சரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் 2 லட்சம் கோடி ஊழல் வெளிவந்துள்ளது. திமுக-வினர் தொட்டுவிட்டார்கள்; முடிவுரையை பாஜக எழுத இருக்கிறது. 2ஜி ஊழலால் திமுக மற்றும் காங்கிரசுக்கு முடிவுரை எழுதப்பட்டதோ, அதேபோல் நாங்கள் கேட்கும் கேள்வி திமுகவிற்கு முடிவுரை எழுதும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.