உங்களால் தான் டிஜிட்டல் புரட்சி சாத்தியம்; பிரதமரை புகழ்ந்த சுந்தர்பிச்சை.!

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, கடந்த 3ம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்ஜித் சிங், பத்ம பூஷன் விருதை சுந்தர் பிச்சையிடம் வழங்கினார். மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சையின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலை சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட சுந்தர் பிச்சை, “இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அந்த உணர்வை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். “கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளர்ந்தது எனது அதிர்ஷடம். என் ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர எனது பெற்றோர்கள் நிறைய தியாகங்களை செய்துள்ளனர்.” எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அதேபோல் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகத்தை காண்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், டிஜிட்டல் பணம் செலுத்துதல் முதல் குரல் தொழில்நுட்பம் வரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதுமைகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

‘காங்கிரசில் இருந்து ராகுல் காந்தியை நீக்குங்க..! – கார்கேவுக்கு பாஜக வலியுறுத்தல்!

இந்தநிலையில் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை இன்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, தங்களுடைய ஆட்சி அமைந்த பின்னர், இந்தியாவில் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இது சிறந்த உத்வேகத்தை வழங்குவதாகவும் கூறிய சுந்தர் பிச்சை, அடுத்த ஆண்டு இந்தியா தலைமையை ஏற்று நடத்தக்கூடிய ஜி20 மாநாட்டிற்கு அனைவருக்குமான இணையதள சேவையை வழங்க ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.