உடல் எடை 100 கிலோ! சர்க்கரை அளவு 228… ஜெயலலிதா உடல்நிலை இப்படித்தான் இருந்தது: ஆறுமுகசாமி


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின்போது அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதா என்பதில் உரியவா்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென நீதியரசா் ஏ.ஆறுமுகசாமி கூறியுள்ளார்.

நீதியரசர் ஆறுமுகசாமி

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது.

உடல் எடை 100 கிலோ! சர்க்கரை அளவு 228... ஜெயலலிதா உடல்நிலை இப்படித்தான் இருந்தது: ஆறுமுகசாமி | Former Tn Cm Jayalalitha Health Arumugasamy

100 கிலோ எடை

ஜெயலலிதாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160,கிரியேடின் 0.82, ஒபிசிட்டி, சுகர், பிபி இதற்கு சர்ஜரி செய்யலாமா என்பதுதான் முக்கிய விடயம்.

அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.