
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி படத்தின் புரோமோஷன் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹொசப்பேட்டையில் நடைபெற்றது. அதற்கு இயக்குநர் ஹரிகிருஷ்ணா, கதாநாயகி ரச்சிதா ராம் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராம் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் தர்ஷன் மீது காலணியை வீசி எறிந்தார். அது அவரது தோள்பட்டையில் விழுந்தது.
இதையடுத்து, மைக்கை வாங்கி சகோதரா இது உன்னோட தவறில்லை என்று பொறுமையாகவும், அமைதியாகவும் பதிலளித்தார் தர்ஷன். இதைத் தொடர்ந்து தர்ஷன் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். அதோடு, அவ்வப்போது பெண்கள் மீது தனக்கு இருக்கும் வெறுப்பை காட்டி வரும் நிலையில், இது போன்று சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
newstm.in