சென்னை: சென்னை திருவல்லிக்கேணி அரசு விக்டோரியா மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அசினா புரத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சதீஷ். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி அருகில் உள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்
விடுதி அருகே உள்ள பிட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து அறைக்கு சென்றவர் காலை வரை திறக்கவில்லை.
அவரது அறை எண் 104இல், சதீஷ் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று மாணவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நேற்று மாலை வரை அறையின் கதவு திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மாணவர் விடுதியின் காப்பாளர் தர்மராஜ் என்பவர் காவல் துறைக்கு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்தனர்.