நுவரெலியா நகரத்தில் பாடசாலை மாணவர்களை போதைபொருளில் இருந்து மீட்டெடுப்பதற்காக, விசேட தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நுவரெலியா நகரத்தில் முக்கிய பாடசாலைகளின் மாணவர்களின் புத்தக பைகளும் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இன்று காலை இடம்பெற்ற இந்த நடவடிக்கையின் போது நுவரெலியா பொலிஸ் பிரிவின் மோப்ப நாய்களும் இதற்கு பயன்படுத்தப்பட்டன.
நுவரெலியா நகரத்திற்கு ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுடனான பஸ்களும். பாடசாலை வேன்களும் பொலிசாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.