பிரபல நடிகரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலமாக மீட்பு!


பிரபல திரைப்பட நடிகரின் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் உல்லாஸ் மனைவி

பிரபல மலையாள திரைப்பட நடிகர் உல்லாஸ் பந்தளம். ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான உல்லாஸ் பிரபலமானதையடுத்து, மம்முட்டி நடித்த ‘தெய்வத்தின் ஸ்வந்தம் கிளீடஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.

அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ளார், இவரது மனைவி ஆஷா(38) குழந்தைகள் உள்ளிட்டோர் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பந்தளம் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உல்லாஸ், தனது மனைவி ஆஷாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து உல்லாசின் வீட்டிற்கு சென்ற பொலிசார் அங்குள்ள அறைகளில் சோதனை செய்தபோது, மாடியில் உள்ள அறையில் ஆஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

பிரபல நடிகரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலமாக மீட்பு! | Actor Ullas Pandalam S Wife Found Hanged Body

eastcoastdaily

விசாரணையில் இறங்கிய பொலிசார்

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அதனை பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடந்த முந்தைய நாள் உல்லாசுக்கும், ஆஷாவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதனால் ஆஷா தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்க சென்றுள்ளார்.

மறுநாள் காலை உல்லாஸ் சென்று பார்க்கையில் மனைவியை காணவில்லை, எனவே அவர் பொலிஸ் புகார் அளித்துள்ளார். அதோடு இது தற்கொலை என்றும் பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது உல்லாஸ் வீட்டில் தான் இருந்திருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.