பூங்கா ஒன்றில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்


பிரித்தானியாவின் ஹல் பகுதியில் பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் சுமார் 7 ஆண்டுகள் பழக்கம் கொண்டவை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மனித உடல் பாகங்கள்

ஹல் பகுதியில் அமைந்துள்ள Brackley பூங்காவிலேயே குறித்த மனித உடல் பாகங்கள் சிதறிய நிலையில் காணப்பட்டது.
தற்போது அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

முதலில், பூங்காவின் சில பகுதிகளில் மனித உடல் பாகங்கள் காணப்பட்டதாக கூறப்பட்ட தகவலை பொலிசார் மறுத்துள்ளதுடன், ஒரே இடத்தில் தான் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பூங்கா ஒன்றில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் | Human Remains Found Detectives Say

@GNP AGENCY LTD

டிசம்பர் 7ம் திகதி, மதியத்திற்குமேல் சுமார் 6 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறப்பு அதிகாரிகல் குழு அந்த பூங்காவின் முக்கிய பகுதிகளில் சோதனை முன்னெடுத்தனர்.

மேலும், பூங்காவானது ரயில் பாதை அருகாமையில் அமைந்துள்ளதால், பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் இந்த வழக்கை முன்னெடுத்திருந்தனர்.

2015 காலகட்டத்தில்

மேலும் மீட்கப்பட்ட உடல் பகங்கள் அனைத்தும் ஒருவருக்கு உரியது என்வும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
இறந்தவரின் தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவிடாத நிலையில், 2015 காலகட்டத்தில் அவர் இறந்திருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு நம்புகிறது.

பூங்கா ஒன்றில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் | Human Remains Found Detectives Say

@GNP AGENCY LTD

இதனிடையே, ரயில் விபத்தில் சிக்கிய நபராக இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் தற்போது இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கடந்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தற்போது தெரிவிக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.