மகா பெரியவர் விழா: "மதுரையில் பிறந்தாலும், வளர்ந்தாலும், வாழ்ந்தாலும் முக்தி!"- சண்முக திருக்குமரன்

காஞ்சி மகா பெரியவர் ஆராதனை வைபவம்  மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் என்ற அமைப்பு சார்பில் எஸ்எஸ்.காலனி எஸ்.எம்.கே. மண்டபத்தில் நடந்து வருகிறது.

அதில் கலந்துகொண்டு ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆன்மிகப் பேச்சாளர் திருக்குமரன் பேசும்போது, “கிருஷ்ண பரமாத்மா ஒரு புல்லாங்குழல் வைத்துக்கொண்டு இந்த உலகத்தை ரட்சித்தவர். ஆண்டாளோ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் பெற்றவர்.

சண்முக திருக்குமரன்

பூலோகத்தில் சிறந்த ஸ்தலம் மதுரை. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி. தில்லையில், காஞ்சியில் தரிசித்தால் முக்தி, அண்ணாமலையாரை நினைத்தால் முக்தி ஆனால், மதுரையில் பிறந்தாலும், வளர்ந்தாலும், வாழ்ந்தாலும் முக்தி.

மதுரைக்குத் திரு ஆலவாய் என்று பொருள். நாம் குழந்தைகளுக்கு நாராயணன், சீனிவாசன், சரவணன், முருகன் என்று தெய்வங்களின் பெயரை வைக்க வேண்டும் அப்போதுதான் இறைவனின் திருநாமத்தை நாம் அடிக்கடி சொல்ல முடியும்.

நாராயணா நாமத்திற்குப் பெரிய வலிமை உண்டு. ‘ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டெழுத்து மந்திரம், அதைச் சொன்னால் கேட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

மகா பெரியவர்

இந்து தர்மத்தில் ஒவ்வொரு செயலிலும் பண்பாடு இருக்கும். வாழ்க்கையில் தர்மத்தோடும் பண்பாடுடனும் வாழ வேண்டும். ஒவ்வொருவரின் வீட்டிலும் காலை விஷ்ணு சகஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம், சுப்ரபாதம் ஒலிக்க வேண்டும். எல்லோரும் டிவி சீரியலில் மூழ்கி இருக்கிறோம் அதைத் தவிர்த்தாலே வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். ஒவ்வொருவரும் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்தால் தர்மம் நம் தலைகாக்கும்” என்று பேசினார்.

நாளை வரும் நடைபெறும் மகா பெரியவர் ஆராதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நெல்லை பாலு செய்து வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.