இன்று (20) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலான 3 நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின் துண்டிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைவாக ‘A’ முதல் W’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.