மெஸ்ஸி அசாமில் பிறந்தவர்… மக்கள் அதிர்ச்சி!!

கோப்பையை வென்றதால் அர்ஜென்டினா மட்டுமின்றி உலகமே மெஸ்ஸியின் வெற்றியையும், சாதனையையும் கொண்டாடி வருகிறது.

பல்வேறு தரப்பினரும் மெஸ்ஸியை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், அசாமின் காங்கிரஸ் எம்.பி., அப்துல் காலிக், பிபா உலகக்கோப்பையை கைப்பற்றியதற்காக மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், மெஸ்ஸி உலகக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்துடன்,”அடி மனதில் இருந்து பாராட்டுகிறேன். உங்களுக்கு அசாமிற்கும் உள்ள தொடர்பை கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்” என பதிவிட்டிருந்தார்.

ஒரு ட்விட்டர் பயனளார்,”அசாம் உடன் தொடர்புடையவரா, எப்படி?” என கேள்வியெழுப்ப, அதற்கு,”மெஸ்ஸி அசாமில் பிறந்தவர்” என எம்.பி., அப்துல் காலிக் பதிலளித்திருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் அவரை வச்சி செய்ததால் ட்வீட்டை நீக்கிவிட்டார்.

ட்வீட் வைரலாவதை கண்ட அப்துல் காலிக், தனது ட்விட்டர் பக்கத்தையும், பேஸ்புக் பக்கத்தையும் பார்க்க வேண்டும் என பதிவிட்டார். தவறை உணர்ந்து ட்வீட்டை அவர் நீக்கவிட்டதாகவும், ஆனாலும் அந்த தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.