ரூ.2,000 நோட்டுகள் செல்லாது!?

ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பின் போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதனால் கருப்புப்பணம் ஒழிக்கப்படும் என கூறியது.

ஆனால் கருப்புப்பணம் ஒழிந்தது போல் தெரியவில்லை. பண மதிப்பிழப்பின் போது மக்கள்தான் கடும் துயரங்களை சந்தித்தனர். சில உயிரிழப்புகளும் நடந்தன. இந்நிலையில் தற்போது இணையத்தில் ஒருதகவல் வேகமாக பரவி வருகிறது.

அதில், கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகவும், அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளே கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படுவதாகவும், எனவே 2000 ரூபாய் நோட்கள் தடை செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட உள்ள வெளியாகும் தகவல் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.