விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவலூர் பேட்டையில் இயங்கி வரக்கூடிய அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நாள்தோறும் நெல், மணிலா,உளுந்து, உள்ளிட்டவைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் விற்பனைக்காக வாகனங்களில் நெல் முட்டைகளை ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் கூடத்தில் ஒழுங்கு முறை நுழைவு வாயிலில் தாற்காலிகமாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் விவசாயிகள் திரும்பிச் சென்றனர். முறையான அறிவிப்பு அவர்களுக்கு தரவில்லை என்று கூறும் விவசாயிகள் நெல் கொள்முதலை விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
