மும்பை: மீண்டும் கொரோனா தொற்று குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்து வருவதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகள், இரண்டாவது வர்த்தக நாளாக நேற்றும், சரிவைக் கண்டன.சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வருவதை அடுத்து, உலகின் பிற நாடுகளுக்கும் மீண்டும் பரவ வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.
கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக, பல நாடுகளின் பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டில் கொரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்ததுடன், அதிகாரிகள் விழிப்புடன் இருந்து, கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, பங்குச் சந்தை வர்த்தகம் இறக்கத்தை சந்தித்துள்ளது.கொரோனா அச்சம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஹோட்டல், சுற்றுலா, விமான சேவை, பொழுதுபோக்கு, சில்லரை விற்பனை ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகள், அதிக அழுத்தத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement