மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றதை அடுத்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் வெற்றி கொண்டாட்டம் நீடிக்கிறகது.
அதன்படி மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜமேய் வாங்மா பீகாபதி பகுதியில் அர்ஜென்டினாவில் வெற்றியை மக்கள் கொண்டாடினர்.
அந்த கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் ஒருவர் வெடி வெடித்து கொண்டாடினார். அதோடு துப்பாக்கி சூடும் நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில், லைஷ்ராம் ஓங்பி இபெடோம்பி (50) என்ற பெண் குண்டு பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் துப்பாக்கி குண்டு பெண்ணின் முதுகில் துளைத்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வால் அப்பகுதி வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அளித்த வாக்குறுதியின் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.
newstm.in