ஆயுதங்களுடன் சிக்கிய ரஷ்ய கப்பல்: பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை


உக்ரைன் விவகாரம் தொடர்பில் தடைவிதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு கப்பல் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில், பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட Lady R

ரஷ்யாவின் Lady R என்ற சரக்கு கப்பல் அமெரிக்க கருவூல துறையால் உக்ரைன் விவகாரத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது.
குறித்த கப்பலானது தான்சானியாவுக்கு பயணப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று நாட்களாக தென் ஆப்பிரிக்காவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

ஆயுதங்களுடன் சிக்கிய ரஷ்ய கப்பல்: பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை | Mounting Pressure Over Russian Ship Arms Delivery

@jacoMarais

உதவி கேட்டு கப்பலில் இருந்து தகவல் அனுப்பப்பட்ட நிலையிலேயே தென் ஆப்பிரிக்க துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவ்வாறான சிக்கல் ஏதும் அந்த கப்பலில் இருந்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த கப்பலானது இருட்டின் மறைவில் தென் ஆப்பிரிக்காவின் கடற்படை துறைமுகத்திற்கு ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதாகவும்,
ஆனால் தெரு விளக்கு வெட்டத்தில், பொதுமக்களின் பார்வையில் குறித்த சம்பவம் சிக்கியதாகவும் கூற்கின்றனர்.

மேலும், அந்த கப்பலில் இருந்து சரக்குகள் வெளியேற்றப்பட்டதாகவும், ஆயுதம் ஏந்திய காவர்கள் அங்கு காணப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

கடற்படை துறைமுகத்தில்

Lady R சரக்கு கப்பலானது டிசம்பர் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரையில் தென் ஆப்பிரிக்க கடற்படை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
தொடர்ந்து அந்த கப்பல் துருக்கி நோக்கி பயணப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்ய கப்பல் ஒன்றை, கடற்படைக்கு சொந்தமாக துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதித்தது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

Supplied/ Kobus Marais

மேலும், அமெரிக்கா இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டுள்ளதுடன், Lady R சரக்கு கப்பலுக்கு உதவும் எவரும் பின்விளைவுகளை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.