உலக பாரம்பரிய சின்னம் அங்கீகாரம் மோடி பிறந்த ஊர் பரிந்துரை| Dinamalar

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி பிறந்த, குஜராத்தின் வாத்நகர் உட்பட மூன்று இடங்கள், உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்

கான முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுஉள்ளன.

‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் சார்பில் உலகளவில் பாரம்பரிய சின்னங்களாக பல இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில், நம் நாட்டில், ௪௦ இடங்கள் இடம்பெற்றுள்ளன.

உத்தர பிரதேசம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தமிழகத்தின் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், நீலகிரி மலை ரயில் போன்றை இதில் இடம்பெற்றுள்ளன.இதற்காக, ஒவ்வொரு நாடுகளும் பரிந்துரைக்கும் இடங்கள், சின்னங்களை யுனெஸ்கோ அமைப்பு பரிசீலிக்கும்.

இதில் முதல் கட்டப் பரிசீலனை பட்டியலில் இடம்பெறும் இடங்களை, இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள சர்வதேச நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு செய்யும்.

இதன் பிறகு ௨௧ உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த அமைப்பின் உலக பாரம்பரிய குழு ஆய்வு செய்து ஓட்டெடுப்பு நடத்தும். இதன் பிறகே, குறிப்பிட்ட நினைவுச்

சின்னம், உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்படும்.

இந்த வகையில், இந்திய தொல்லியல் துறை சமீபத்தில் மூன்று பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் வாத்நகரமும் இடம்பெற்றுள்ளது.

இதைத் தவிர குஜராத்தின் மோதராவில் உள்ள சூரியன் கோவில், திரிபுராவில் உள்ள உனகோட்டி பாறை சிற்பங்கள் ஆகியவையும் இடம்பெற்று உள்ளன.

இதை ஆய்வு செய்த யுனெஸ்கோ, தன் முதல்கட்ட உத்தேச பரிசீலனை பட்டியலில் இந்த மூன்றையும் இணைத்து

உள்ளது. இந்தப் பட்டியலில் ஏற்கனவே நம் நாட்டைச் சேர்ந்த, ௪௯ இடங்கள், நினைவுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் காஞ்சிபுரம் கோவில்களும் அடங்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.