கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை…! கைது செய்யப்படுவார் என தகவல்

கத்தார்,

கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது தனது நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று முன்தினம் நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.இந்த வெற்றியால் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா தேசமே கொண்டாட்டத்தில் குலுங்கியது.

இந்தநிலையில், இறுதிப்போட்டியின்போது அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடிய அந்நாட்டு ரசிகை ஒருவர் திடீரென மேலாடையை கழற்றி சுழற்றிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டு சட்டத்திட்டங்களின் படி பொதுவெளியில் எவரேனும் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

கத்தாரில் கால்பந்து ரசிகர், ரசிகைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிகள் கடுமையான பின்பற்றப்பட்டன. தோளில் இருந்து முழங்கால் வரையில் மறைக்கும் வகையில் ஆடைகள் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேலாடையை கழற்றி ஆடிய ரசிகையின் வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கத்தார் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணைப் பற்றி விவாதம் நடந்து வருகிறது. அப்பெண்ணின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனப் ட்ப தரப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெற்றியை ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் அந்த நாட்டு ரசிகை அதுபோன்ற செயலை செய்து இருக்கலாம் என பேச்சுபொருளாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.