சினிமாவை விட்டு விலகுகிறாரா சமந்தா? திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை!

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.  தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது.  சமந்தா தனது துறையில் ஒரு பக்கம் தொடர்ந்து சாதித்துக்கொண்டே வந்தாலும் மறுபுறம் அவர் பல கடினமான சூழ்நிலைகளையும் அனுபவித்து கடந்து வந்துகொண்டு இருக்கிறார்.  கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது காதல் கணவரை விட்டு பிரிந்தார், அதன் பிறகு தனது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ‘மயோசிட்டிஸ்’ எனும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த நோயுடன் தான் போராடுவது பற்றி சமந்தா கண்கலங்க பேட்டியொன்றில் பேசியது ரசிகர்களை கலக்கமடைய செய்தது, இருப்பினும் தான் இந்த நோயிலிருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.  இவரது மேல் சிகிச்சைக்காக தென் கொரியாவிற்கு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது.  சமந்தா நடிப்பில் ‘சாகுந்தலம்’ மற்றும் ‘குஷி’ போன்ற படங்கள் வெளியாகவுள்ளது, ‘குஷி’ படத்தில் தனது காட்சிகளை சமந்தா நடித்து முடித்துவிட்டார்.  

சமந்தாவிற்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்துள்ளது, ‘பேமிலி மேன் 2’ வெற்றிக்கு பிறகு இவருக்கு பாலிவுட்டில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.  ஆனால் தற்போது உடல்நிலை காரணமாக சமந்தாவால் மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  தன்னால் படத்தின் பணிகள் தாமதமாகக்கூடாது என்பதற்காக சமந்தா தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும், தனது உடல்நிலை சரியான பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.