
டிசம்பர் 29ல் ஐஸ்வர்யா ராஜேஷின் ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரிலீஸ்!
மலையாளத்தில் நிமிஷா விஜயன் நடிப்பில் வெளியான படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்த படத்தை ஜியோ பேபி என்பவர் இயக்கினார். சூப்பர் ஹிட்டான அப்படத்தின் தமிழ் ரீமேக்கை தற்போது அதே தலைப்பில் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். புதிதாக புகுந்த வீட்டிற்கு வந்த ஒரு பெண் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் படும் கஷ்டங்களை கூறும் கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவரது கணவராக பாடகி சின்மயின் கணவரான ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 29ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.