நாய் உடன் ஒப்பீடு… காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு!!

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜகவினர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ஆனாலும், இவரது நடைப்பயணத்தில் பல்வேறு பிரபலங்கள் பொதுமக்கள் பலரும் அணிதிரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடைப்பயணத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டிற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு நாயையாவது இழந்திருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இன்னும், அவர்கள் (பாஜக) தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுகிறோம்” என்றார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் எழுந்தது. மல்லிகார்ஜுன கார்கே, தான் கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அது எப்படி பாஜகவினரை ஒரு நாயுடன் ஒப்பிட முடிகிறது என்றும் கடும் கண்டனம் எழுந்தது.

பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தில் சீன எல்லை பிரச்னை குறித்து விவாதம் நடைபெறுவதை அனுமதிக்காத பாஜக அரசு வெளியில் சிங்கம் போல் பேசுகிறார்கள். ஆனால், பார்த்தால் எலி போல் செயல்படுகிறார்கள் என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் சொன்னது சபைக்கு வெளியே கூறியது. நான் சொன்னது அரசியல் ரீதியாக சபைக்கு வெளியே, சபைக்கு உள்ளே அல்ல. அதைப் பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.