சென்னை: புராதன சின்னங்கள் பராமரிப்பு, கால்வாய், தடுப்பணை உள்ளிட்ட ஒப்பந்த பணிக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தமிழக பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவின்படி ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குழாய் பதிப்பு, குடிநீர் விநியோகம், கல்வி நிலையங்கள், மருத்துவமனைக்கான ஒப்பந்த பணிக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
