திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட பதிவுத்துறை அலுவலர் பிரகாஷ் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2022ல் நாட்றம்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தர் ராமு, போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்துள்ளார். அதேபோல் திருப்பத்தூர் சார் பதிவாளர் பகுதி ஒன்றில் அரசு பத்திர எழுத்தர் சங்கர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்துள்ளார். நாட்றம்பள்ளியை சேர்ந்த சதானந்தன் என்பவரும் போலியான ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்துள்ளார்.
திருப்பத்தூரை சேர்ந்த பத்திர எழுத்தர்கள் கோபால், ரவிச்சந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி 6 பத்திர எழுத்தர்களின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பத்திர எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, என்றார்.