வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத் : ‘பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்நாட்டின் பத்திரிகையாளர் செய்யது அலி ஹைதர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் கூறியதாவது:எங்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ஒரு பெண்ணுடன் போனில் ஆபாசமாக பேசுவது போல வெளியிடப்பட்டுள்ள ஆடியோ போலியானது.
அவரைப் போலவே குரலை பயன்படுத்தி, விஷமத்தனம் செய்துள்ளனர். இது, அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக தற்போதைய அரசு ஒத்துழை-ப்புடன் பரப்பி விடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement