மீண்டும் கொரோனா ஊரடங்கா? இந்தியாவில் இன்று முக்கிய சந்திப்பு, உலக நாடுகளில் பீதி

சீனாவில் அமலில் இருந்த கடுமையான கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிகையில் கூர்மையான உயர்வைக் காண முடிகின்றது. வரும் மாதங்களில் அங்கு கோவிட் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உலகெங்கிலும் பல நாடுகளில் கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கு காணலாம்: 

கோவிட்-19 வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் வாரந்தோறும் சுமார் 1200 தொற்றுகள் பதிவாகும் அளவிற்கு தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

– நோய்த்தொற்றின் புதிய மாறுபாடுகளைக் கண்காணிக்க, நேர்மறை வழக்கு மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறையையும் (ஹெனோம் ஈக்வென்சிங்) அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் செவ்வாயன்று அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதினார்.

– “ஜப்பான், அமெரிக்கா, கொரியா குடியரசு, பிரேசில் மற்றும் சீனாவில் தொற்று திடீரென அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, மாறுபாடுகளைக் கண்காணிக்க நேர்மறை தொற்று மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறையையும் துரிதப்படுத்துவது அவசியமாக உள்ளது.” என்று அவர் ஒரு கடிதத்தில் கூறினார்.

– NTAGI, INSACOG மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆகியவற்றின் உயர்மட்ட அரசாங்க விஞ்ஞானிகள் இந்தியாவில் கோவிட் தொற்று குறைவாக இருப்பதாகவும், விரிவான தடுப்பூசி மற்றும் மக்களுக்கு மத்தியில் ஹைப்ரிட் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

– “விரிவான கோவிட் தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக இந்தியா இப்போது மிகவும் வசதியான நிலையில் உள்ளது. மேலும் இங்கு அனைவரும் இந்த தொற்றுக்கு ஏறக்குறைய ஆளாகி, அதன் வட்டத்தில் வந்ததால், நாட்டு மக்களிடையே ஹைப்ரிட் இம்யூனிட்டி, அதாவது கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகியுள்ளது. தொற்றில் எழுச்சி ஏற்படும் போதெல்லாம் சீன மக்கள் கடுமையான ஊரடங்கை பின்பற்றினர். ஆகையால் மக்கள் வைரஸுக்கு ஆளாகவில்லை. தற்போதுள்ள முக்கியமான ஒரே விஷயம் என்னவென்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும்.” என்று தேசிய தொழில்நுட்ப உதவியாளர் குழுவின் (என்.டி.ஜி.ஐ) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறினார்.

– செய்தி நிறுவனம் AFP செவ்வாயன்று, சீனா முழுவதும் உள்ள தகன மையங்களில் சடலங்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது. 

– கடந்த மாதம், ஏறக்குறைய மூன்று வருட ஊரடங்குகள், தனிமைப்படுத்தல்கள் மற்றும் வெகுஜன சோதனைகளை நீக்குவதற்கான முடிவை சீன அரசாங்கம் திடீரென எடுத்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் காய்ச்சல் மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் பள்ளிகள் ஆன்லைன் முறைக்கு திரும்பிச்செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,049 புதிதாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர், இருவர் இறந்தனர். இதன் மூலம், தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.6 மில்லியனாகவும், இறப்புகள் 530,677 ஆகவும் உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.