இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைக்கு வர உள்ள வாரிசு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாகவும் அதில் முக்கிய இயக்குனர்கள் சங்கர், அட்லி, சிம்பு மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை வெளியீட்டு விழாவிற்காக மேடை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக விஐபி வருகைக்கான வரவேற்பு வளைவுகள் அரங்கம் முழுதும் வண்ண மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் மற்றும் செட் பிராப்பர்ட்டி தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
#Varisu Audio Launch Place getting ready#VarisuAudioLaunch pic.twitter.com/qhYAGcQTL5
— RAJA DK (@rajaduraikannan) December 21, 2022
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று ரசிகர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இசை வெளியீட்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வாரிசு படத்துடன் துணிவு படமும் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை முழுக்க முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.