பெங்களூரூவில், வேலையை விட்டு நீக்கிய தொழில் அதிபரை பழி வாங்க அவரது வீட்டில் இருந்த 2 பணியாளர்களை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரமங்களாவில் ராஜகோபால் ரெட்டி என்பவரிடம் 20வருடங்களாக பணிபுரிந்த ஜெகதீஷ் என்ற கார் ஓட்டுனர் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் தனது கூட்டாளிகள் 2பேருடன் (கடந்த 15ந்தேதி ) ராஜகோபால்ரெட்டி வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 2 பேரை கொலை செய்து 5லட்சம் ரூபாய் ரொக்கம், 100 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.