Thunivu: அஜித்திடம் பிடிக்காதது என்ன ? வெளிப்படையாக பேசிய வினோத்..!

சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினோத். முற்றிலும் வித்யாசமான கோணத்தில் அவர் எடுத்த இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின் கார்த்தியை வைத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தீரன் படத்தை இயக்கினார் வினோத். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வினோத்.

நேர்கொண்டப்பார்வை படத்தின் மூலம் முதல் முறையாக அஜித்துடன் கூட்டணி வைத்த வினோத் அதைத்தொடர்ந்து வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி வருகின்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற இந்தாண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Thalapathy vijay: பகையை மறந்து கூட்டணி அமைக்கும் நடிகர் விஜய்..இதை யாரும் எதிர்பார்களையே..!

எனவே தற்போது உருவாகி வரும் துணிவு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார் வினோத். இந்நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

லவ் டுடே வெற்றி – ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

சமீபத்தில் துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வினோத் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போதே இறங்கியுள்ளார்.

அந்த வகையில் பல பேட்டிகளில் கலந்துகொண்டு படத்தைப்பற்றியும், அஜித்துடன் பணியாற்றியதை பற்றியும் வெளிப்படையாக பேசி வருகின்றார் வினோத். இந்நிலையில் அஜித்தை பற்றி அவர் பேசிய ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது அஜித்திடம் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வினோத், அஜித்திடம் ஒரு முறை பழகினாலே அவரை பிடிக்காதவர்கள் கூட அவரது ரசிகராகிவிடுவார்கள். அந்த அளவிற்கு அஜித் அனைவரிடமும் பழகுவார். எனவே அவரிடம் பிடிக்காத விஷயம் என ஒன்றும் இல்லை என்றார் வினோத்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.