ராகுல்காந்திக்கு நிதிஷ்குமார் ஆதரவு குரல்…மத்திய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!…

ராகுல் காந்தி யாத்திரைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது பாதயாத்திரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கொரோனாவில் முதலில் ஏன் பின்வாங்கினார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இப்போது காங்கிரசார் பாதயாத்திரை போகிறபோது ஏன் திடீரென விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தாக வேண்டும் என்றார். யாத்திரைக்கு ஏன் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மட்டும் ஊர்வலங்கள் எல்லாம் நடத்துகிறார்களே? என நிதிஷ் கேள்வி எழுப்பினார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.