சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் விமான நிலையத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்காலிக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வரி உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் பெண்ணுக்கு மூத்த வரி உதவியாளர் ரெக்ஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் மூத்த வரி உதவியாளர் ரெக்ஸை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.