பிரபல திரைப்பட நடிகர் காலமானார்! கமல்ஹாசன், சத்யராஜ் படங்களில் நடித்தவர்


பிரபல திரைப்பட நடிகர் கைகலா சத்யநாராயணா தனது 87வது வயதில் காலமானார்.

தமிழ் திரைப்படங்களிலும் நடித்த கைகலா சத்யநாராயணா

தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்தவர் கைகலா சத்யநாராயணா. இவர் தயாரிப்பாளர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார்.

தமிழிலும் நடிகர் கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம், சத்யராஜுடன் பெரியார் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சத்யநாராயணா இன்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார் என அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

பிரபல திரைப்பட நடிகர் காலமானார்! கமல்ஹாசன், சத்யராஜ் படங்களில் நடித்தவர் | Actor Kaikala Satyanarayana Passes Away

indiatoday

பல்வேறு தரப்பினரும் இரங்கல்

மறைந்த சத்யநாராயணாவுக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சத்யநாராயணாவின் இறுதிச் சடங்குகள் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள மகாபிரஸ்தானத்தில் சனிக்கிழமை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 750க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
சத்யநாராயணாவின் மறைவிற்கு முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.