டெல்லி: மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்புமருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.