Rajini: எதிர்பாராத கூட்டணியுடன் இணையும் தலைவர்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

ரஜினி தற்போது நெல்சனின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமீபகாலமாக ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக அவரின் மீது சில பல விமர்சனங்களும் வைக்கப்பட்டன. எனவே தற்போது ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார் ரஜினி.

தொடர் தோல்விகளினால் தன் சம்பளத்தை கூட ரஜினி கணிசமாக குறைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நெல்சனின் இயக்கத்தில் தான் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் தனக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் ரஜினி .

Thunivu: அஜித் துணிந்து எடுத்த அதிரடி முடிவு..ஒர்கவுட் ஆகுமா ?

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி என பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து ரஜினி லைக்காவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். அதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ராஜினிகாந்த் இயக்கவுள்ளார்.

மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

லால் சலாம் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் ரஜினி. இதையடுத்து ரஜினி சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் சிபியின் கதையில் ரஜினிக்கு உடன்பாடில்லை என்பதால் தற்போது பிரதீப் ரங்கநாதனிடன் கதை கேட்டுள்ளார் ரஜினி. இந்நிலையில் அவ்வாறு பிரதீப் ரங்கநாதனின் கதையை ரஜினி ஓகே செய்தால் அதற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார் என பேசப்பட்டு வருகின்றது.

இதுவரை விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் யுவன் இசையமைத்துள்ளார். ஆனால் ரஜினி மற்றும் கமலின் படங்களுக்கு மட்டும் அவர் இதுவரை இசையமைத்ததில்லை. எனவே விரைவில் ரஜினியின் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் வாய்ப்பு அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.