இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் ,கிறிஸ்தவ மக்கள் ஆன்மீக நடவடிக்கைகளில்….. ..

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதற்காக, கிறிஸ்தவ மக்கள் ஆன்மீக ரீதியான தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர்..

வறிய மக்களுக்கு உதவுவதே இந்த வருட நத்தார் தினத்தின் தொனிப்பொருள் என கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மெக்ஸ்வெல் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேராயர், கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான நத்தார் தின நள்ளிரவு ஆராதனை பன்னிப்பிட்டிய கிறிஸ்து ராஜா தேவாலயத்தில்; இன்றிரவு 11.45க்கு ஆரம்பமாகும்.

தமிழ் மொழி மூலமான நத்தார் நல்லிரவு ஆராதனைகள் கொழும்பு, கொச்சிக்கடை, அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் இடம்பெறும்.

கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

அன்;னை வேளாங்கன்னி ஆலயத்தில் இடம்பெறும் இன்றைய நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்திரா அலைவரிசையில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலமையிலான நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் புனித மரியாள் பேராலயத்தில் இரவு 11.30க்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலமையிலான நள்ளிரவு ஆராதனைகள் புனித மரியாள் பேராலயத்தில் இரவு 11.40க்கு கூட்டுத்திருப்பலியாக இடம்பெறும்.

கண்டி மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை தலமையிலான நள்ளிரவு ஆராதனைகள் புனித அந்தோனியார் பேராலயத்தில் இரவு 11.45க்கு கூட்டுத்திருப்பலியாக இடம்பெறும்.

இதேவேளை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை தலமையிலான நத்தார் தின நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.45க்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலமையிலான நத்தார் தின நள்ளிரவு ஆராதனைகள் யாழ். புனித மரியாள் பேராலயத்தில் இரவு 11.45க்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

நத்தார் தினத்தை முன்னிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலி;ஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.