புதுடில்லி, ஆண்டுக்கு 20 ஆயிரம் பயணியர் கார்களை ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, காமராஜர் துறைமுக நிறுவனத்துடன், ‘மாருதி சுசூகி’ 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
வட சென்னையில் இருந்து 24 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்த துறைமுகம், உலக நாடுகளுக்கு மாருதி கார்களை ஏற்றுமதி செய்யும் நான்காவது இந்திய துறைமுகமாகும்.
அத்துடன், வாகன ஏற்றுமதிக்காகவே கார் மற்றும் பொது சரக்கு கிடங்கை காமராஜர் துறைமுக நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாருதியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிஷாஷி டக்யூச்சி கூறியதாவது:
மாருதி சுசூகி, உலக நாடுகளுக்கு நம்பகமான உலகத்தரத்தில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த துறைமுகம் மாருதியின் ஏற்றுமதியை வெவ்வேறு திசைகளில் விரிவுபடுத்துவதுடன் மட்டுமல்லாமல், மும்பை, குண்டிரா மற்றம் பிபாவவ் துறைமுகங்களில் இருக்கும் ஏற்றுமதி நெரிசலைக் குறைக்கவும் உதவுவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement