வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பணியில் அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு புகாரில் 10 சீனியர் அதிகாரிகளை கட்டாய ஒய்வு அளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். உத்தரவிட்டர்.
மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ரயில்வே அமைச்சராக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ்., இவரது கீழ் தொலை தொடர்பு துறையில் இணை செயலாளர், கூடுதல் இணை செயலாளர் அளவில் பணியாற்றி வந்த 10 சீனியர் அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து உரிய விசாரணையில் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
![]() |
இதையடுத்து அவர்களை கட்டாய ஒய்வு அளித்து உத்தரவிட்டு, மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு பரிந்துரைத்தார். இதே போல ரயில்வே துறையிலும் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்கள் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement