ஸ்ரீநகர்:பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நம் நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆயுத பறிமுதல் என ராணுவம் கூறியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக, நம் எல்லைப்புறங்களுக்கு கடத்தி வருகின்றனர்.
இவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர்தீவிரமாக கண்காணித்துபறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு -காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி அருகே, பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் – இ – தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தினர் ஆயுதங்களை கடத்தி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராணுவம்மற்றும் போலீசார் இணைந்து அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, ஹத்லங்கா கிராமத்தில் பாக்., எல்லை அருகே நம் பகுதிக்குள் புதைத்து வைக்கப்பட்டு இருந்த, எட்டு அதிநவீன ஏ.கே., ரக துப்பாக்கிகள்,12 கைத்துப்பாக்கிகள், வெடிமருந்து, வெடிகுண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இது, இந்த ஆண்டில் மிகப்பெரிய ஆயுதப் பறிமுதல் என ராணுவம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement