இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள், ஒரு போலீஸ்காரர் பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள ராவல்பிண்டி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், நேற்று முன்தினம் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரில் வந்த பெண் உட்பட இரு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதில், அவர்களும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பலியாகினர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் – இ – தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்டில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தங்கள் அமைப்பின் தலைவர் அப்துல் வாலிக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து, இஸ்லாமாபாத் நகர் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement