கோட்டயம்:கேரளாவின் மஹாத்மா காந்தி பல்கலையில் மாணவியருக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மஹாத்மா காந்தி பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மஹாத்மா காந்தி பல்கலையின் துணை வேந்தர் அரவிந்த குமார் தலைமையில் சிண்டிகேட் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவியருக்கு, முதல் மற்றும் இரண்டாவது பிரசவத்துக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை, பிரசவத்துக்கு முன் அல்லது பின் எடுத்துக் கொள்ளலாம்.
செமஸ்டர் தேர்வு நடக்கும் போது, மகப்பேறு விடுமுறையில் உள்ள மாணவியர் அந்த செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்ய-ப்படுவர். ஆனால், அந்த தேர்வுகளை அடுத்த செமஸ்டரில் துணைப் பாடமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இதேபோல், ஆய்வகதேர்வு, செய்முறை தேர்வு, கலந்துரையாடல்ஆகியவற்றுக்கும் சம்பந்தப்பட்ட மாணவியரின் துறை தலைவர்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்வர்.
இதற்காக, மாணவியர்டாக்டர் சான்றிதழுடன்மகப்பேறு விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement