ம.பி.யில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டுக்கு மட்டும் தடை இல்லையா?..திக்விஜய் சிங் கேள்வி

போபால்: கொரோனா தொற்றை காரணம் காட்டி ராகுலின் ஒற்றுமை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு மத்தியப்பிரதேசத்தில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த மாதம் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுலின் பாரத் ஜோடோ பயணத்தினால் கொரோனா தொற்று பரவும் அச்சம் இருக்கிறது என்றால் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மூலமாக கொரோனா பரவும் ஆபத்து இல்லையா? மத்தியப்பிரதேச முதல்வர் சவுகானுக்கு மட்டும் ஒன்றிய அரசு ஏன் இதுபோன்று நோட்டீஸ் அனுப்பவில்லை? கொரோனா விதிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.