ரஷ்யாவில் 22 பேர் உடல் கருகி பலியான பாரிய தீ விபத்து!

ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டவிரோதமாக இயங்கிய முதியோர் இல்லம்

சைபீரிய பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில், தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் சட்ட விரோதமாக இயங்கி வந்தது.

ஏராளமான முதியவர்கள் தங்கியிருந்த இந்த இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கணநேரத்தில் இரண்டு தளங்களிலும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால், அங்கே இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

இதனால் பலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

ரஷ்யாவில் 22 பேர் உடல் கருகி பலியான பாரிய தீ விபத்து! | Fire Accident In Russia 22 Killed Nursing Home

@AP

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரஷ்யாவில் 22 பேர் உடல் கருகி பலியான பாரிய தீ விபத்து! | Fire Accident In Russia 22 Killed Nursing Home

@Russian Emergencies Ministry/TASS

22 பேர் பரிதாப பலி

விடிய விடிய தொடர்ந்த இந்த பணியின் மூலம், நேற்று காலையில் முழுமையாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த கோர விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.  

ரஷ்யாவில் 22 பேர் உடல் கருகி பலியான பாரிய தீ விபத்து! | Fire Accident In Russia 22 Killed Nursing Home

@Russian Emergencies Ministry/TASS

ரஷ்யாவில் 22 பேர் உடல் கருகி பலியான பாரிய தீ விபத்து! | Fire Accident In Russia 22 Killed Nursing Home

@EPA Photo

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.