அடடா இது அல்லவா காதல் .! வருங்கால கணவர் வாங்கிய கடனை அடைத்து திருமணம் செய்துக்கொண்ட பெண்!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரத்தில் வசித்து வருபவர் சொள. இவர், தனது வருங்கால கணவராக ஹூ என்பவரை சந்தித்தார். சந்தித்த முதல் நாளே ஒருவருக்கொருவர் காதல் பற்றிக்கொண்டது.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பாக ஒரு மாதத்திற்கு ஒருவரையொருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் வருங்கால கணவரின் ரூ. 21 லட்சம் கடணை சொள அடைத்துள்ளார். காதலில் பணம் முக்கியமில்லை என்றும், அவரது அன்பு மட்டுமே போதும் என கூறியுள்ளார். மேலும் தனது வருங்கால கணவர் தனது குடும்பத்திற்கு சரியானதைச் செய்வார் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

சொள தனக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பித் தருவதாக வருங்கால கணவர் உறுதியளித்ததாகவும், அவளைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கப் போவதாகவும் அவர் கூறினார். இவர்களின் பெருந்தன்மையை பார்த்து சமூகதளவாசிகள் வியப்படைந்து இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.