பாலக்காடு: கேரளாவில் முதல் முறையாக, பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அரசு ஆரம்பப் பள்ளியில், ரோபோடிக், கோடிங், வெர்ச்சுவல் ரியாலிட்டி உட்பட கண்டுபிடிப்பு ஆய்வகம் அமைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது, வியக்க வைக்கிறது.
பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அரசு ஆரம்பப் பள்ளியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில், குழந்தைகள் படைப்பாக்க ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆரம்ப நிலையிலேயே, தொழில்நுட்பம் குறித்து, குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பள்ளி முதல்வர் சசிதரன் கூறியதாவது: ஆரம்பப் பள்ளிகளில், இப்படி ஒரு ஆய்வகம் அமைக்கப்படுவது, மாநிலத்தில் இதுதான் முதல் முறை. ப்ரோக்ராமிங்/கோடிங், ரோபோடிக்ஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெக்கானிக்ஸ், பேசிக் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உட்பட முக்கிய அம்சங்கள் குறித்து, குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, மாணவர்களின் சிந்திக்கும் திறன் மேலும் வலுவடையும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான சனல் கூறியதாவது:மாணவர்களுக்கு, சிறு வயதில் இருந்தே படைப்பாற்றல், புதுமை ஆகிய விஷயங்களில் பயிற்சி அளிப்பது, நம் நாட்டின் தேவை. அதற்கான ஒரு முயற்சி இது எனலாம். ட்ரோன், ரோபோடிக்ஸ் உட்பட பல அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குகிறோம்.இப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் முன்வந்துள்ளனர். பள்ளி சிறுவர்களும், அதை ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement