மாணவியருக்கு மாந்திரீக சிகிச்சை உத்தர பிரதேச அரசுக்கு நோட்டீஸ்| Notice to Uttar Pradesh government for witchcraft treatment of girl students

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில் மதிய உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியருக்கு, மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்ததற்காக, மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, மஹபூபா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், சமீபத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 15 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவியரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், மந்திரவாதி ஒருவரை வரவழைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவியரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து, ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இவ்விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதில், ‘பாதிக்கப்பட்ட மாணவியரை, சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து செல்லாதது மனித உரிமை மீறல் ஆகும்.

‘இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து உ.பி., அரசின் தலைமைச் செயலர், நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.